Pages

Wednesday, August 11, 2021

SALT THERAPY VIDEO உப்பு சிகிச்சை பரிகாரம் உடனடி திருமண பாக்கியம் பெற

              SALT THERAPY VIDEO உப்பு சிகிச்சை பரிகாரம் உடனடி திருமண பாக்கியம் பெற

NDM CHANNELS

 
உப்பு சிகிச்சை SALT THERAPY

விரைவான திருமண பாக்கியம் பெற, உப்பு சிகிச்சை பரிகாரம் செய்யலாம், மேலும் இந்த உப்பு சிகிச்சை, வேலைவாய்ப்பு, உத்தியோக உயர்வு, சொந்த வீடு, வாகனம், பணம் பொருள் என் எதுவேண்டுமோ அது கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து செய்யலாம்.

உப்பு சிகிச்சை எப்படி செய்யவேண்டும்?:-

இரண்டு கைகளிலும் கல்லுப்பு (கடல் உப்பளத்திலிருந்து கிடைக்கும் உப்பு) எடுத்துக்கொண்டு, உப்பு உங்களது உள்ளங்கையில் இருக்குமாறு வைத்து கைகளை மூடிக்கொண்டு, ஒரு 15 நிமிடம் காலில் செருப்பு இல்லாமல் வெறும் காலில், மண் தரை அல்லது புற்கள் நிறைந்த தரைப்பகுதியில் நடக்கவேண்டும் (கடற்கரை மணலிலோ அல்லது ஆத்தங்கரை மணலிலோ நடப்பது மேலும் சிறப்பு) நீங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தால் உங்கள் வீட்டு பகுதியில் இருக்கும் தோட்டத்திலோ அல்லது அருகில் இருக்கும் விளையாட்டு மைதானம், அல்லது பூங்கா போன்ற இடங்களை பயன்படுத்தலாம்.  

தினமும் 15 நிமிடம் உப்பை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நிற்கலாம், நடக்கலாம், ஓடலாம் எது உங்களுக்கு வசதியோ அப்படியே செய்யுங்கள். இந்த உப்பு சிகிச்சையை  காலை, மதியம், மாலை, இரவு என எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி செய்யும்போது வெறும் வயிற்றில் (சாப்பிடுவதற்கு முன்பாக) செய்யவேண்டும். கையில் உப்பு இருக்கும் பொது உட்காரக்கூடாது. அப்படி தவறுதலாக கையில் உப்பு வைத்திருக்கும்போது உட்கார்ந்து செய்தால் முதுகு, தொடைப்பகுதியில் அதிக இரத்த ஓட்டம் பாய்ந்து மூல வியாதியை தந்துவிடும் ஆகவே கையில் உப்பு இருக்கும்போது உட்க்காரக்கூடாது. பாட்டி/தாத்தா  காலத்தில் உட்க்கார்ந்திருப்பவர் கையில் உப்பு குடுக்க கூடாது என்பதும் மூல வியாதி வந்துவிடும் என்பதால் அப்படி செய்யக்கூடாது என்பார்கள்.

ஒரு நாளைக்கு ஒரு முறை 15 நிமிடம், உள்ளங்கைகயில் உப்பு வைத்துக்கொண்டு தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்வது ஒரு சுற்று பயிற்சி என்பார்கள். முக்கியமாக உப்பு உங்கள் கையில் இருக்கும்போது உங்களின் சிந்தனை, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைப்பற்றிய சிந்தனையாக மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கையில் உப்பு இருக்கும் போது தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்துவிடுங்கள். 15 அல்லது 20  நிமிடம் உப்பு சிகிச்சை செய்து முடித்ததும்  கையில் இருக்கும் உப்பை உங்களது தலையை 3 சுற்று சுற்றி தூக்கி எறிந்துவிடுங்கள் அல்லது கையிலிருக்கும் உப்பை தண்ணீரில் கரைத்துவிட்டு கையை அலம்பிவிடலாம்.

உப்பு சிகிச்சையின் மகத்துவம் :-  கையில் ஏறிய உப்பு உங்களது நாடி நரம்புகளை சூடாக்கும் அதனால் உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் சக்தியானது தூண்டப்பட்டு நமது கால்கள் மண் அல்லது புள் தரையோடு தொடர்பு பெற்று நமது உடலின் அனைத்து எதிர்மறைஆற்றல் /சக்தி பூமிக்குள் சென்றுவிடும். அப்போது நமது நேர்மறை ஆற்றல் பிரபஞ்ச ஆற்றலோடு கலந்து உங்களின் எண்ணங்களில் இருக்கும் உங்களது தேவையை பூர்த்தி செய்கிறது.  

சித்தரின் கூற்றுப்படி, பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் 5-நாட்கள் மாதவிடாய் நேரத்தில் இந்த உப்பு சிகிச்சையை செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். காரணம் மாதவிடாய் நாட்களில் உப்பு சிகிச்சை செய்தால் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் ஆதலால் ரத்தப்போக்கும் அதிகமாகிவிடும் என்பதால் உப்பு சிகிச்சை  மாதவிடாய் கலைகளில் செய்வதை விட்டுவிட்டு அதன் பிறகு தொடர்ந்து செய்யலாம் என்கிறார்.எ

வெவ்வேறுவகையான திருமண தோஷங்களால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் இந்த உப்பு பயிற்சியை செய்யவேண்டும். அப்படி அவர்கள் செய்யாதபோது அவரின் தாய் அல்லது தந்தை இந்த உப்பு சிகிச்சையை செய்யலாம். ஆனால் பெற்றோர்கள் உப்பு சிகிச்சை செய்யும் பொது அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கேட்கவேண்டும்.அப்படி செய்யாமல் மகன் /மகள் திருமணம் சீக்கிரம் நடக்கவேண்டும் என்று கேட்கக்கூடாது. பெற்றோர்கள் செய்யும் பொது எனது மருமகன் அல்லது மருமகள் அவர்களின் சுற்றமும் நட்பும் அனைவரும் சேர்ந்து எனது வீட்டிற்கு வந்து திருமணம் நிச்சயம் செய்யவேண்டும் என்று உப்பு சிகிச்சை செய்பவர்கள் பிறருக்காக என்று செய்யாமல் தங்களின் தேவைகளை  மட்டுமே கேட்டு பிரார்த்தனை செய்தால்தான் சிறப்பான பலன் தரும்.

கேள்வி:- உப்பு பரிகாரம் கல்யாண பையனே செய்யனுமா.  அல்லது அவரின் பெற்றோர்களும் (அம்மா/அப்பா) செய்யலாமா.? பதில்:- 🙏பெற்றோர்களும் செய்யலாம்.. ஆனால் நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது எனது மருமகள் அல்லது மருமகன், மற்றும் அவரது குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் அனைவரும் சீக்கிரம் என் வீட்டிற்கு வந்து திருமணம் நிச்சயம் செய்யவேண்டும் என்று பெற்றோர்கள் அவர்களுக்கு தேவையானதை மட்டும் பிரார்த்தனை செய்யவேண்டும்.... ஆகவே உப்பு பரிகாரம் செய்பவர்கள் தங்களுக்கு தேவையானதை மட்டுமே கேட்டால் முழு பயன் தரும்.. வேறு ஒருவருக்கு தேவையானதை(எனது மகனுடைய திருமணம் சீக்கிரம் நிச்சயமாகவேண்டும் என்று வேறு ஒருவருக்காக என கேட்டக்கக்கூடாது) அப்படி கேட்டால் அதற்கு பாதி பலனே கிடைக்கும்... 👍🙏 போகர் சித்தர் கூற்றுப்படி, எப்படிப்பட்ட சாபம் மற்றும் வினைப்பயனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் வினைப்பயனுக்காக வருந்தி அவர்களே அதற்கான விமோச்சன பரிகாரங்களை செய்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு முழு பலனும் கிடைக்கும் என்கிறார்.... அதோடு தோஷ பரிகாரங்களை 40 வயதில் சரியாகிவிடும் என்று காத்திருக்காமல்.. 25 வயதிலேயே உரிய விமோச்சன பரிகாரத்தை செய்து கெட்ட வினைப்பயனை உடைத்தெரிந்துவிட்டு வெளியே வரவேண்டும் என்கிறார்... 🔔பாவத்திற்கு வருந்துவதே பரிகாரம் என்கிறார்...
 1. SALT THERAPY-1  https://youtu.be/hHCNLKfa834


2. HOW TO GET BOYS/GIRLS PROFILE FROM NDM WEB BLOGhttps://youtu.be/9bJLVoc1ipE


3. 
அஞ்சனக்கல் அதிசயம்  https://youtu.be/K1SJooSLiA0


4. INDOOR SALT THERAPY  
https://youtu.be/o7GqTExnMGw


5.உடனடி திருமண பாக்கியம் பெற   https://youtu.be/OCB1y60WTiY



6.Quick Marriage Oppertunity for Age 30 to 45year Grooms & Brides

 https://youtu.be/cwJ9IUCId7o 


7.செவ்வாய் தோஷமா? கவலை வேண்டாம் நிச்சயம் உடனே திருமண வாய்ப்பு https://youtu.be/lxkCyi4DOoc



8.சுக்கிரன் அஸ்தமன தோஷம், களத்திர தோஷ பரிகாரம், சித்தர் வகுத்த எளிய பரிகாரம்.. https://youtu.be/F3ZToVFTkNg


9.ஆமையின் உருவை வீட்டில் வைப்பதால்... சித்தர்கள் கூற்று https://youtu.be/yCv_nq71CLY

No comments:

Post a Comment